தன்னை பிரதமர் ஆக்கினார் மியன்மார் ஜெனரல்

தன்னை பிரதமர் ஆக்கினார் மியன்மார் ஜெனரல்

ஆறு மாதங்களுக்கு முன் இராணுவ சதி மூலம் அப்போது பதவியில் இருந்த ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவ ஆட்சி அமைத்த ஜெனரல் Min Aung இன்று ஞாயிறு தன்னை தானே பிரதமர் ஆகியுள்ளார். அத்துடன் 2023ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெப்ருவரி மாதம் 1ம் திகதி மேற்படி ஜெனரல் ஆட்சி கவிழ்ப்பு செய்திருந்தார். அன்று முதல் 75 வயதான Aung San Suu Kyi இரகசிய இடத்தில் தடுப்புக்காவலில் உள்ளார். அவருடன் பல அரசியல்வாதிகளும் தடுப்பில் உள்ளனர்.

அத்துடன் தான் ASEAN (Association of Southeast Asian Nations) தெரிவு செய்யும் நபருடன் இணங்கி செயற்படவும் தயார் என்றும் ஜெனரல் கூறியுள்ளார். மேற்கு நாடுகள் ஜெனெரலை தண்டிக்கும் காலத்தில் அவர் ASEAN நாடுகளின் உதவியை தன்வசம் கொண்டிருக்க முனைகிறார்.

இராணுவ கவிழ்ப்பின் பின், கடந்த 6 மாதங்களில், அங்கு மொத்தம் 939 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் அரசு சுமார் 7,000 பேரை கைது செய்துள்ளது.