இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கான அறிவிப்பு பலகைகளில் தமிழை தவறாக பதிப்பதையிட்டு நம் தமிழர் அழுது புலம்புவது உண்டு. அவ்வாறு அழ தமிழில் மீதான அளப்பரிய பற்று காரணமா அல்லது சிங்களத்தின் மீதான வெறுப்பு காரணமா என்ற உண்மையை அறிவது மிக கடினம்.
.
.
இவ்வாறு சிங்களம் செய்யும் தமிழ் கொலைக்கு அழும் தமிழர் பலர் தமது குழந்தைகளுக்கு மட்டும் உலகின் எந்தவொரு மொழியிலும் அர்த்தம் காணமுடியாத பெயர்களை இடுவதும் உண்டு. உப்பு இல்லாமல் இவர்கள் தமிழ் சமையல் செய்வதும் இல்லை, ஒரு வடமொழி உ’ஷ்’ இல்லாமல் இவர்கள் தமிழ் பெயர் இடுவதும் இல்லை.
.
.
அண்மையில் தேனீ என்ற பதிப்பிலும் ஒரு ஆக்கம். அதில் இலங்கையில் உள்ள “அங்கவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என்ற அறிவுப்பு பலகையில் ‘ங்’ என்ற எழுத்துக்கு பதிலாக குற்றுப்போட்ட ‘து’ இருந்தமை சுட்டி காட்டப்பட்டுள்ளது.
.
.
ஆனால் இவ்வகை தவறுகளை தமிழர்களே செய்யும்போது சிங்களத்தை நோவான் ஏன்?
.
.
கனடாவின் Toronto நகரில் செயல்படும் Porter Airlinesன் in-flight சஞ்சிகையான re:porter கனடாவின் 150 வருட கொண்டாட்டத்தையிட்டு ஒரு ஆக்கத்தை பிரசுரித்து இருந்தது. அதில் ஒரேயொரு தமிழ் சொல்லும் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த ஒரேயொரு தமிழ் சொல் ‘வணக்கம’ – அதாவது ‘ம்’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘ம’ என்ற எழுத்துடன். இந்த தமிழ் கொலையை செய்தது சிங்களவரா அல்லது கனடா தமிழரா?
.