தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை

TamilNadu

தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை

தமிழ்நாட்டில் திங்கள் இரவு பயணித்துக்கொண்டு இருந்த ரயிலில் இந்திய ரூ5.75 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர் ரயில் பெட்டியின் கூரையை வெட்டி, உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
.
திங்கள் இரவு 9:00 மணியளவில் சேலத்தில் (Selam) இருந்து புறப்பட்ட ரயிலில் (Selam Express) ஏற்றப்பட்ட இந்த பணம் செவ்வாய் அதிகாலை 4:40 மணியளவில் சென்னையை அடையவிருந்து. Reserve Bank of Indiaவுக்கு சொந்தமான 342 கோடி பணம் இதில் இருந்துள்ளது. இவை பழுதடைந்த தாள்கள் ஆகையால் பாவனையில் இருந்து கழிக்கப்பட்டவையாகும். இவை முறைப்படி அழிக்கப்பட எடுத்து செல்லப்பட்டது. ஆனாலும் இவை பொதுமக்கள் மத்தியில் பயன்படுத்தபடக்கூடியவை.
.

ரயில் சென்னை ஏக்மோர் (Egmore) நிலையத்தை அடைத்தபோதே கொள்ளை இடம்பெற்ற உண்மை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இந்த ரயில் 10 இடங்களில் நின்று சென்றுள்ளது. இந்த இடங்களில் ஒன்றில் ஏறிய கொள்ளையர் கூரையில் ஒரு சதுர அடி துவாரம் ஏற்படுத்தி கொள்ளையை செய்துள்ளனர். பின் விருத்தாச்சலம் நிலையத்தில் இறங்கி தப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
.