தலிபானை கட்டுப்படுத்த Northern Alliance?

தலிபானை கட்டுப்படுத்த Northern Alliance?

மதங்களை நிராகரித்த சோவியத் 1979ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுள் நுழைந்த பின் அதை எதிர்த்து முதலில் போராட ஆரம்பித்தவர் Ahmad Shah Massoud. அந்த யுத்தம் 1989ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இவர் தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள Panjshir Valley என்ற Hindu Kush மலைப்பகுதியை சார்ந்த Tajik இனத்தவர். சோவியத் வெளியேறிய பின் இவர் ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்தார்.

இவர் இஸ்லாமிய அரசை அமைக்க விரும்பினாலும், தலிபானின் கடும்போக்கு இஸ்லாமிய அரசை மறுத்திருந்தார். அதனால் இவரின் Northern Allence அணிக்கும், Pashto மொழியை பேசும் Pashtun இனத்தவரை அதிகமாக கொண்ட தலிபான்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகின. அவர்களுக்கு இடையே ஆயுத சண்டையும் ஆரம்பித்தது.

அல்-கைடாவின் பலத்துடன் இருந்த தலிபான் Ahmad Shah Massoud ஐ, நியூ யோர் 9/11 தாக்குதலுக்கு இரண்டு தினங்களுக்கு முன், நிருபர் போல் நடித்து படுகொலை செய்திருந்தது. 9/11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கா Northern Alliance உதவியுடனேயே முதலில் ஆப்கானிஸ்தானின் வட பகுதிகளை கைப்பற்றி இருந்தது.

தற்போது தலிபான் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினாலும், Panjshir ஆறு செல்லும் Panjshir Valley பள்ளத்தாக்கை தமது கடுப்பாட்டுள் கொண்டுவரவில்லை. அப்பகுதி Ahmed Shah Massoud டின் மகன் Ahmed Massoud டின் ஆயுத அணியின் கைகளிலேயே உள்ளது. இவர்களுடன் முன்னாள் படையினர் சிலரும் உள்ளனர். உயர்ந்த மலைகள் உள்ள காரணத்தால் வெளியிடத்து இராணுவம்  இப்பகுதிக்குள் நுழைவது இலகுவல்ல. சோவியத் இங்கேயே பல கவச வாகனங்களை இழந்து, பல தோல்விகளை சந்தித்து இருந்தது.

தற்போது இவர்கள் மீண்டும் தலிபானுக்கு எதிராக யுத்தமிட ஆரம்பித்து உள்ளனர். NRF (National Resistance Front) என்று தற்போது அழைக்கப்படும் இவர்கள் தலிபானுடன் பேச தயாராகா உள்ளதாகவும் கூறி உள்ளனர். தலிபானை எதிர்ப்போர் இவர்களை நாடி, உதவிகள் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது பெருமளவு தலிபான்கள் இப்பகுதிக்கு வெளியே குவிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.