தலிபான் உள்ளே மோதல்?

தலிபான் உள்ளே மோதல்?

கடந்த மாதம் அமெரிக்கா வெளியேறிய பின் தலிபான் ஆப்கானிஸ்தான் ஆட்சியை யுத்தமின்றி கைப்பற்றி இருந்தது. ஆனால் அந்த தலிபான் குழுவுக்குள் முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தலிபானின் உதவி பிரதமராக பதவியேற்ற Mullah Abdul Ghani Baradar தற்போது இருப்பிடம் அறியப்படாது உள்ளார்.

Mullah Abdul Ghani Baradar கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் ஆதாரம் இன்றிய செய்திகள் கூறுகின்றன. இந்த சந்தேகம் தோன்றியபின் தலிபான் Baradar கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆனால் அந்த வீடியோ முன்னர் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் Baradar சுயமாக பேசுவதற்கு பதிலாக, எழுதிய செய்தி ஒன்றை வாசித்து இருந்தார்.

இந்த முரண்பாடு தலிபானின் ஆயுத பிரிவுக்கும், அரசியல் பிரிவுக்கும் இடையிலேயே தொடர்வதாக கூறப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் மோதிய ஆயுத பிரிவு புதிய அரசின் பலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு இருக்க முனைகிறது.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க பாகிஸ்தான் பல கடும்போக்கு தலிபானை முன்னர் கைது செய்திருந்தது. அதனால் கடும்போக்கு தலிபான் தற்போது பாகிஸ்தானையும் வெறுக்கிறது. அவர்கள் தற்போது ஈரானை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை ஆப்கானிஸ்தானுக்கு உரிய $9 பில்லியன் சொத்தை அமெரிக்கா தற்போது முடக்கி