தாய்லாந்து சென்றது முத்து ராஜா யானை

தாய்லாந்து சென்றது முத்து ராஜா யானை

தாய்லாந்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யானையான முத்து ராஜா மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முத்து ராஜா ஞாயிரு தாய்லாந்து சென்றுள்ளது.

தற்போது 19 வயதுடைய முத்து ராஜா சுமார் $540,000 செலவில் வர்த்தக விமானம் ஒன்றில் எடுத்து செல்லப்படுள்ளது. இதை எடுத்து செல்ல 4 தாய்லாந்து யானை பராமரிப்பாளரும் இலங்கை வந்திருந்தனர்.

புத்த கோவில் ஒன்றில் இருந்த இந்த யானையை இலங்கையில் துன்புறுத்தியதாக தாய்லாந்து கூறுகிறது. இலங்கை பிரதமர் தாய்லாந்து அரசரிடம் மன்னிப்பு கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த யானைக்கான மருத்துவம் தாய்லாந்தில் செய்யப்படும். குறிப்பாக முன் கால் ஒன்றில் உள்ள முறிவும் மருத்துவம் பெறும்.

இந்த யானை 2001ம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்டு இருந்தது. இது பாரிய வேலைகளுக்கு அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.