தாய்லாந்து தேர்தலில் வென்றவர் பிரதமர் ஆகமுடியாது நிலை

தாய்லாந்து தேர்தலில் வென்றவர் பிரதமர் ஆகமுடியாது நிலை

கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் Move Forward Party எதிர்பாராத வெற்றியை அடைந்து இருந்தது. அதுவரை ஆட்சியில் இருந்த இராணுவ ஆதரவு கொண்ட கட்சி படுதோல்வி அடைந்து இருந்தது.

தற்போது தேர்தல் இடம்பெற்று 65 தினங்கள் ஆகினாலும் முதலாவதாக வெற்றி பெற்ற கட்சி அதன் தலைவரை பிரதமர் ஆக்க முடியாது உள்ளது.

தாய்லாந்தில் மொத்த ஆசனங்கள் 500. கடந்த தேர்தலில் முன்பின் அறியாத Move Forward கட்சி 151 ஆசனங்களை பெற்றது. பிரபலமாக இருந்த Pheu Thai கட்சி 141 ஆசனங்களை பெற்றது. இவர்கள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் Move Forward கட்சி தலைவர் Pita Limjaroenrat பிரதமர் ஆக தேவையான வாக்குகளை பெற முடியாதுள்ளார்.

அதேவேளை இராணுவ ஆட்சியின் ஆளுமை கொண்ட நீதிமன்றம் ஒன்று Pita வின் தேர்தல் வெற்றியை இன்று புதன் இடைநிறுத்தம் செய்துள்ளது. தேர்தல் காலத்தில் இவர் ஒரு ஊடகத்தில் முதலீடு செய்திருந்தார் என்று குற்றம் சாடுகிறது.

Pita, வயது 42, அமெரிக்காவில் கல்வி கற்றவர்.

2014ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்த அரசு அந்நாட்டின் ஆட்சி முறை இராணுவத்தால் நியமிக்கப்படும் செனட் உறுப்பினர்களின் கைகளில் இருக்கும்படி செய்துள்ளது.