தாய்வானில் தலையிடல் நெருப்புடன் விளையாடுவது போன்றது

தாய்வானில் தலையிடல் நெருப்புடன் விளையாடுவது போன்றது

நேற்று அமெரிக்க சனாதிபதிக்கும் சீன சனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற இணைய மூல உரையாடலில் (virtual talk), தாய்வான் சீனாவின் அங்கம் என்றும் அதில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது (playing with fire) போன்றது என்று சீன சனாதிபதி பைடெனுக்கு கூறி உள்ளார்.

சூழல் மாசடைவதை தடுத்தல், வர்த்தகம் போன்ற விசயங்களில் சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முன்வருவதாகவும் ஆனால் தாய்வான் போன்ற விசயங்களில் அமெரிக்கா தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்றும் சீன அரச பத்திரிகைகள் கருத்து தெரிவித்து உள்ளன.

தாய்வான் விசயத்தில் அமெரிக்கா One China கொள்கையில் இருந்து விலகவில்லை என்று பைடென் சீயிடம் கூறியுள்ளார். அதாவது தாய்வான் சீனாவின் அங்கம் என்பதே அமெரிக்காவின் கொள்கை என்று கூறியுள்ளார்.

நேற்றைய உரையாடல் எதுவித இணக்கங்களையும் ஏற்படுத்தாவிடினும், உரையாடல் முறுகல் இன்றி இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த உரையாடல் சுமார் 3.5 மணித்தியாலங்கள் இடம்பெற்றதாவும், அது எதிர்பார்த்தத்திலும் அதிக நேரம் என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய உரையாடல் நலமாக இடம்பெற்றதால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலும் இடைநிலை பேச்சுக்கள் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.