தாய்வானில் பஸ் விபத்து, 26 பலி

BusFire
தாய்வானில் உல்லாசப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று தீ பற்றிக்கொண்டதால் 24 பயணிகளும், சாரதியும், உல்லாச பயணிகளின் வழிகாட்டியும் பலியாகி உள்ளனர். இந்த 24 பயணிகளும் சீனாவின் Liaoning மாநிலத்தவர்கள். இவர்கள் தமது உல்லாச பயணம் முடிந்து சீனாவுக்கு திரும்புவதகாக விமான நிலையம் செல்கையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
.
சாரதியும், வழிநடத்துபவரும் தாய்வானை பிறப்பிடமாக கொண்டவர்கள்.
.

விபத்து நடந்த இடத்து தீ அணைக்கும் படை அதிகாரி “பஸ்ஸில் அகப்பட்டவர்கள் தப்பிக்க போதிய நேரம் இருந்திருக்கவில்லை” என்றுள்ளார். சுமார் 30 தீ அணைக்கும் படையினர் 13 வாகனங்களில் சென்றிருந்தும், எவரையும் காப்பாற்ற முடிந்திருக்கவில்லை. பஸ்ஸின் இரண்டு கதவுகளும் வீதி பாதுகாப்புக்காக தெருவோரம் நிறுவப்பட்டு இருந்த இரும்புகளுடன் (guard rail) நெரித்து இருந்ததால் அவ்விரு கதவுகளும் திறக்கப்பட முடிந்திருக்கவில்லை.
.