தாய்வானில் பெலோஷி, இதுவரை பாரிய சீன பதிலடி எதுவுமில்லை

தாய்வானில்  பெலோஷி, இதுவரை பாரிய சீன பதிலடி எதுவுமில்லை

சீனாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் Taipei நகரில் உள்ள Songshan விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.

இதற்கு முன் பெலோஷி சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சென்று இருந்தார். தாய்வானின் பின் இவர் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்வார்.

மலேசியாவில் இருந்து சென்ற இவரின் SPAR19 என்ற குறியீடு கொண்ட Boeing C-40C வகை விமானம் தென் சீன கடலின் மேலாக செல்லாது வெகு தூரம் சுற்றியே தாய்வானுக்கு சென்று இருந்தது.

இதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் சீனா தாய்வானில் இருந்து 100 நிறுவனங்களின் இறக்குமதிகள் பலவற்றை தடை செய்து இருந்தது. இதன்படி மொத்தம் 2,066 தாய்வான் உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

செவ்வாய்க்கிழமை 21 சீன யுத்த விமானங்கள் தாய்வான் எல்லையுள் சென்றாலும் அவை தாக்குதல் எதையும் செய்யவில்லை.

பெலோஷி  தாய்வான் சென்றபின் தாய்வானை சுற்றி 4 இடங்களில் பாரிய இராணுவ பயிற்சிகளை ஆகஸ்ட் 4ம் திகதி முதல் செய்யவுள்ளதாக சீனா அறிவித்து உள்ளது.