தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

நேற்று அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதுக்கு பதிலடியாக சீனா என்றும் இல்லாத அளவில் பாரிய யுத்த பயிற்சிகளை தாய்வானை சுற்றி ஆரம்பித்து உள்ளது. இந்த பயிற்சி ஆகஸ்ட் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை இடம்பெறும். இதற்கான அறிவிப்பை சீனா பெலோஷி  தாய்வானில் இறங்கியவுடன் அறிவித்து இருந்தது.

ஒரு live-fire பயிற்சி என்றும் அதன்படி இதில் long-range live ammunition ஏவுதல் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாய்வானை சுற்றி குறைந்தது 6 இடங்களில் மேற்படி பயிற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் தாய்வானின் துறைமுகங்கள் மறைமுகமாக முடக்கத்தில் உள்ளன. தாய்வான் அரசு அங்கு செல்லும் கப்பல்களை மாற்று வழிகளில் வருமாறு கூறியுள்ளது.

இதுவரை காலமும் சீனா பயிற்சி செய்த இடங்களின் தாய்வானில் இருந்தான  தூரங்களிலும் மிக குறைவான தூரங்களிலேயே தற்போதைய பயிற்சிகள் நடைபெறுகின்றன.

தாய்வானின் Kinmen தீவுக்கு மேலாக சீனாவின் ஆளில்லா விமானம் பறந்ததாகவும்  கூறப்படுகிறது.

மேற்படி பயிற்சிக்கு G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையில் முரண்பாடு இருந்தாலும் சீனாவே தாய்வானின் முதலாவது பெரிய வர்த்தக உறவு நாடு.