​தாய்வானை தாக்குவது போல் சீனா இராணுவ ஒத்திகை​

​தாய்வானை தாக்குவது போல் சீனா இராணுவ ஒத்திகை​

தாய்வான் தீவை தாக்குவது போல் சீன இராணுவம் ஒத்திகை செய்கிறது. சனி, ஞாயிரு, திங்கள் ஆகிய 3 தினங்கள் செய்யப்படும் சீனாவின் இந்த இராணவ ஒத்திகை தாய்வான் சனாதிபதி அண்மையில் அமெரிக்கா சென்று அமெரிக்க House அவை தலைவரை சந்தித்ததை கண்டிக்கும் நோக்கில் செய்யப்படுகிறது.

பெரும்பலாலான ஒத்திகை நடவடிக்கைகள் தாய்வானின் தென்மேற்கு கடல் பகுதியில் இடம்பெற்றாலும், தாய்வானின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுகின்றன.

சனிக்கிழமை சீனாவின் 71 யுத்த விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. ஞாயிரு 70 யுத்த விமானங்கள் பங்கு கொண்டன. அதில் Su-30 யுத்த விமானங்களும், H-6 குண்டு வீச்சு விமானங்களும் அடங்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நான்சி பெலோஷி தாய்வான் சென்றபோதும் சீனா இவ்வாறு தாய்வானை சுற்றிவளைத்து இராணுவ ஒத்திகை செய்திருந்தது.