தாய்வான் சனாதிபதி கட்சி தலைமை பதவியிலிருந்து விலகினார்

தாய்வான் சனாதிபதி கட்சி தலைமை பதவியிலிருந்து விலகினார்

தாய்வான் சனாதிபதி Tasi Ing-wen இன்று சனிக்கிழமை தனது Democratic Progressive Party (DPP) என்ற கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகி உள்ளார். இன்று 26ம் திகதி தாய்வானில் இடம்பெறும் உள்ளூர் தேர்தல்களில் DPP கட்சி படுதோல்வி அடைந்ததே அவரின் பதவி விலகலுக்கான காரணம்.

கடுமையான சீன எதிர்ப்பு கொள்கைகள் மூலம் கடந்த காலங்களில் தாய்வான் மக்களின் ஆதரவை Tasi Ing-wen பெற்று இருந்தாலும் மக்கள் தற்போது மனம் மாறி உள்ளனர்.

Tasi Ing-wen பல சீன எதிர்ப்பு கொண்ட அமெரிக்க அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்று இருந்தார். அண்மையில் அமெரிக்க House தலைவி நான்சி பெலோசி தாய்வான் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை எதிர்த்து சீனா சில நாட்கள் தாய்வான் மீது மறைமுக பொருளாதார தடை விதித்து இருந்தது. அந்த தடையை அமெரிக்கா முறிக்கவில்லை.

யூகிரேனுக்கும் அமெரிக்கா மிகையான ஆயுதங்களை வழங்கினாலும், அமெரிக்க படைகள் யூகிரேன் சென்று போராடவில்லை. அதனால் யூகிறேன் நிலையே தமக்கும் ஏற்படலாம் என்றும் தாய்வான் மக்கள் கருதியிருக்கலாம்.

தாய்வானின் KMT (Kuomintang) என்ற எதிர்க்கட்சி, மொத்தம் 21 தேர்தல்களில், தலைநகர் Taipei உட்பட 13 தேர்தல்களில் வென்று உள்ளது. DPP மொத்தம் 5 தேர்தல்களில் மட்டுமே வென்றுள்ளது.

கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகினாலும், தான் சனாதிபதி பதவியை 2024ம் ஆண்டுவரை கொண்டிருக்க உள்ளதாக  Tasi Ing-wen கூறியுள்ளார். அந்த ஆண்டே அவரின் தற்போதைய பதவிக்காலம் முடியும்வரை

KMT என்ற கட்சியே மா ஓவினால் தாய்வானுக்கு விரட்டப்பட்ட கட்சி என்றாலும், அந்த கட்சி தற்போது சீனாவுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறது.