தாய்வான் தலைநகர் மேலால் சீன ஏவுகணைகள்

தாய்வான் தலைநகர் மேலால் சீன ஏவுகணைகள்

அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதால் விசனம் கொண்ட சீனா ஆரம்பித்த தாய்வானை சுற்றிய யுத்த பயிற்சியின் முதல் நாள் பல சீன ஏவுகணைகள் தாய்வான் மேலாக சென்று உள்ளன. இதனால் விசனம் கொண்டுள்ள G7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்கு நாடுகள்.

சீனா குறைந்தது 9 ஏவுகணைகள் தாய்வான் நோக்கி ஏவி உள்ளது. அதில் 4 தாய்வானின் தலைநகர் Taipei மேலாக சென்றுள்ளது. இவ்வாறு சீனா செய்வது இதுவே முதல் தடவை.

இவை அனைத்தும் DongFeng வகை ஏவுகணைகள் என்று கூறுகிறது தாய்வான் இராணுவம். தைவான் இராணுவம் சீனா சீன 11 ஏவுகணைகள் ஏவியுள்ளது என்று கூறுகிறது.


தாய்வான் செல்லும் விமான மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல விமான சேவைகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டு உள்ளன. Korean Air, Asiana ஆகியன தாய்வானுக்கான தமது சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

சீனாவின் இந்த பயிற்சி 7ம் திகதிவரை தொடரும்.