தாலித் தம்பதி வெட்டிக்கொலை, ரூ15 கடன் காரணம்

India

 

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள மணிப்பூரி என்ற இடத்தில் தாலித் தம்பதி ஒன்று 15 ரூபா ($0.22) கடன் காரணமாக கோடாலியால் கொத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
.
ஒரு கிழமையின் முன் இந்த தம்பதி 3 பிஸ்கட் பைகளை, ஒவ்வொன்றும் 5 ரூபா வீதம், தமது பிள்ளைகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். கடை உரிமையாளர் (Ashok Mishra), ஒரு தாலித் அல்லாதவர், கடன் பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு மரணித்த தம்பதி தினக்கூலி கிடைத்தபின் பணத்தை தருவதாக கூறியுள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்த கடை உரிமையாளர் கோடாரி ஒன்றினால் கணவனை (Bharat) கொத்தி கொன்றுள்ளார். அதை தடுக்க முனைந்த மனைவியையும் (Mamta) கடை உரிமையாளர் கொன்றுள்ளார்.
.
கடை உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். கோடாரியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
.

அதேவேளை தமிழ்நாட்டில் உள்ள கருவூர் தாலித் மக்கள் சிலர் தாம் இஸ்லாத்துக்கு மாறவுள்ளதாக கூறியுள்ளனர். இவர்களை அங்குள்ள மகாசத்தி அம்மன் ஆலயத்தில் பங்குகொள்ள அனுமதி மறுத்த போதே இவர்கள் இவ்வாறு கூறி உள்ளனர். Tamil Nadu Toweed Jamaat என்ற அமைப்பு குர்ரான் பிரதிகளை வழங்க ஆரம்பித்து உள்ளது.
.