திருட்டு பணத்தை நாடும் கனடிய அரசியலால் கனடாவுக்கு ஆபத்து

திருட்டு பணத்தை நாடும் கனடிய அரசியலால் கனடாவுக்கு ஆபத்து

தம்மை ஒரு நேர்மையான நாட்டினர் என்று கூறும் கனடிய அரசியல்வாதிகள் உலகம் எங்கும் இருந்து திருடர்களை, கொடூர அரசியல்வாதிகளை, ஊழல் நிறைந்த அதிகாரிகளை மேசைக்கு கீழால் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கின்றனர். விரோத தொழில்கள் மட்டுமே தெரிந்த இந்த விரோதிகள் கனடாவுக்குள்ளும் விரோத செயல்களை தொடர்வதால் கனடிய வரி செலுத்துவோருக்கு பண, நிர்வாக சுமைகள் அதிகரிக்கின்றன.

தற்போது 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் Charles Taylor என்ற லைபீரியாவின் (Liberia) war criminal ஆட்சியில் ஒரு ஜெனரல் ஆக இருந்த Bill Horace என்பவன் 2002ம் ஆண்டு கனடாவுக்கு அகதியாக வந்துள்ளான். அவனின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் அவன் மீண்டும், மீண்டும் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்து உள்ளான்.

ஆனால் இவன் மீது Canadian Centre for International Justice (CCIJ) ஒரு war crime வழக்கு தொடர கேட்டிருந்தாலும் கனடிய அரசு அதற்கு மறுத்துள்ளது. CCJI தாம் கனடிய அரசுக்கு “a mountain of evidence on a silver platter” வழங்கியது என்று கூறியுள்ளது. ஆனால் கனடா இதை வெறும் immigration விசயமாகவே கையாண்டு, Bill Horace ஐ war crime குற்றச்சாட்டில் இருந்து தப்பவைக்க உதவி உள்ளது.

Bill Horace மீது 2013ம் ஆண்டு கள்ள கனடிய தாள்களை அச்சடித்த குற்றத்துக்காக அரசு வழக்கு ஒன்றையும் தொடர்ந்து இருந்தது. 2016ம் ஆண்டு கள்ள காசடிப்பு வழக்கு அரசால் கைவிடப்பட்டு, $5,000 குக்கு கீழான குற்றத்துக்காக மட்டும் 12 மாத probation தண்டனை வழங்கப்பட்டு இருந்தது.

இவனுக்கு 5 பிள்ளைகள் உண்டு. இரண்டு பெண்கள் சுவீடன் நாட்டில் வாழ்கின்றனர். இவன் 2010ம் ஆண்டு திருமணம் செய்த மனைவியுடனும் அவர்களின் இரண்டு பிள்ளைகளுடனும் London, Ontario நகரில் வாழ்ந்து வந்துள்ளான். 2020ம் ஆண்டு இவன் வீட்டில் நுழைந்த 4 பேரால் சுட்டு கொலை செய்யப்பட்டான். Keiron Gregory என்பவனே கொலையை செய்ததாக  போலீசார் நம்புகின்றனர்.

Bill க்கும் Keiron  க்கும் இடையில் சமூகவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Keiron என்பவனின் தந்தை ஒரு முன்னாள் போலீசார். தந்தை மூலமே மகன் Bill Horace வீட்டு முகவரியை அறிந்து, அங்கு சென்று கொலையை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கொலை செய்யப்பட்ட Bill இன் மனைவி தற்போது கனடிய போலீசார் உட்பட சில கனடிய திணைக்களங்களின் மீது C$ 775,000 நாட்டஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.