தீ மூண்ட X-Press Pearl கப்பல் தாழ்கிறது

தீ மூண்ட X-Press Pearl கப்பல் தாழ்கிறது

கடந்த 10 தினங்களாக தீக்கு இரையாகி வந்திருந்த X-Press Pearl என்ற 186 மீட்டர் நீள கப்பல் கடலுள் தாழ ஆரம்பித்து உள்ளது. தாழும் இந்த கப்பலில் இருந்து வெறியேறும் நச்சு எண்ணெய்கள் இப்பகுதி கடல் வாழ் உயிரினத்தையும், கரையோரத்தையும் கடுமையாக பாதிக்கும்.

இந்த கப்பல் கொழும்புக்கும், நீர்கொழும்புக்கும் இடைப்பட்ட கடலில் தாழ்கிறது. இதை நாடுகடலுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த கப்பலில் உள்ள 25 தொன் nitric அமிலமும், மற்றைய இரசாயனங்களும் இப்பகுதி கடலுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கப்பலில் அதன் பாவனைக்கு 325 தொன் bunker fuel எண்ணெய்யும் உள்ளது. அந்த எண்ணெய்யும் மெதுவாக கசிய ஆரம்பிக்கும். கப்பல் உடைந்தால் அந்த எண்ணெய் விரைவில் கசியும்.

கப்பலில் இருந்த அமிலங்கள் தரமற்ற கொள்கலன்கள் காரணமாக முதலில் கசிய ஆரம்பித்து இருந்தது. ஆனால் கப்பல் அதை கொழும்பு துறைமுகத்துக்கு வருமுன் தெரிவிக்கவில்லை.

இந்த கப்பல் கட்டாரில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, இந்தியா சென்று பின் இந்து சமுத்திரத்தில் இருக்கையில் கசிவு காரணமாக கட்டாரையும், இந்தியாவையும் கரை செல்ல அனுமதிக்கும்படி கேட்டிருந்தது. அவை மறுக்க, இலங்கை அனுமதி வழங்கி இருந்தது. கசிவை அறிந்த இலங்கையும் பின்னர் அங்கிருந்து இருந்து வெளியேற கப்பலை பணித்தது.