தென்கொரியாவுள் புகுந்தார் வடகொரிய தலைவர்

NorthKoreaTest

இன்று வெள்ளி வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுள் புகுந்து, தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து உள்ளார். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய வட-தென் கொரியாக்களுக்கு இடையிலான எல்லையை வடகொரிய தலைவர் கடப்பது இதுவே முதல் தடவை.
.
எல்லையின் வடகொரியா பக்கத்தில் உள்ள Panmungak என்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறிய வடகொரியாவின் கிம், எல்லை கோடுவரை வந்துள்ளார். எல்லையில் அவரை வரவேற்ற தென்கொரிய ஜனாதிபதி தென்கொரியாவுள் நுழைய அழைத்துள்ளார். தெற்கே வந்த வடகொரிய கிம், புகைப்படங்கள் எடுத்தபின் தென்கொரிய ஜனாதிபதியை எல்லைக்கு வடக்கே அழைத்தும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
.
இந்த சந்திப்பு இரண்டு கொரியாக்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவருடன் அவரின் சகோதரி Kim Yo Jong கும் பயணம் செய்துள்ளார்.
.
இந்த சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதியும் வடகொரிய ஜனாதிபதியும் சந்திப்பதற்கான வேலைப்பாடுகளும் செய்யப்படும்.
.
அந்நியரால் பிரிக்கப்பட்ட கொரியாவுள் பெரியதோர் மாற்றம் நிலவுள்ளது. அந்த மாற்றத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் நேரடியாக ஒருவர் மற்றவரை நம்பவில்லை. பதிலாக பலமான ஒரு வல்லரசே இவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கியிருக்க வேண்டும். அது சீனாவா, ரஷ்யாவா அல்லது அமெரிக்காவா என்பது வரும் காலத்திலேயே தெரியவரும்.
.
இங்கு ஒரு தீர்வு வரின், அதன் பின்னர் ஒரு வல்லரசு அதிகம் பாதிப்பை உணரும். அப்போதே தெரியவரும் தீர்வை நடைமுறை செய்த மற்ற வல்லரசு எதுவென்று.
.

குறிப்பாக அங்கு ஒரு தீர்வு வரின், அதன்பின் அங்கு நிலைகொண்டுள்ள பல்லாயிரம் அமெரிக்க படைகளை வெறியேற கேட்கப்படுமா என்பதே இங்கே முக்கியமான கேள்வி.
.