தென்கொரிய புதிய ஜனாதிபதி Moon Jae-in

MoonJaeIn

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக Moon Jae-in வெற்றி பெறவுள்ளார். இன்று செவ்வாய் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை (Democratic Party) சார்ந்த Moon Jae-in சுமார் 41.5% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.Conservative கட்சியை சார்ந்த Hong Joon-Pyo சுமார் 23.3% வாக்குகளையும், சுயாதீன வேட்பாளரான Ahn Cheol-Soo சுமார் 21.8% வாக்குகளையும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது. சட்டப்படியான முடிபுகள் புதன்கிழமையே வெளிவரும்.
.
தென்கொரியாவில் செயல்பட்டு வந்திருந்த நீண்டகால Conservative ஆட்சி இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
.
Moon Jae-in வடகொரியாவையும், தென்கொரியாவையும் பேச்சுவார்த்தைகள் மூலம் இணைக்க விரும்புபவர். தான் வெற்றி பெற்றால் வடகொரியாவுக்கு பயணம் செய்வேன் என்று இவர் கூறியுள்ளார். அமெரிக்காவை ஒரு நட்பு நாடாக கருதும் இவர், அமெரிக்காவின் கூற்றுக்கள் எல்லாவற்றுக்கும் உடன்பட வேண்டிய அவசியம் தென்கொரியாவுக்கு இல்லை என்றும் கருதுபவர்.
.
Moon Jae-in 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு, இரண்டாம் இடத்தை அடைந்து இருந்தவர்.
.
Moon Jae-in இம்முறை ஜனாதிபதி ஆக வெற்றி பெறக்கூடும் என்ற கணிப்பிலேயே அமெரிக்கா அவசர அவசரமாக தனது THAAD (Terminal High Altitude Area Defense) ஏவுகணை முறியடிப்பு ஏவுகணைகளை தென்கொரியாவில் அமைத்தது. அப்போது தென்கொரியாவில் சட்டப்படியான ஜனாதிபதி இருந்திருக்கவில்லை. முன்னைய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்திருந்தார்.
.