தென் கொரியாவில் அதிகரிக்கும் தனிமை மரணங்கள்

தென் கொரியாவில் அதிகரிக்கும் தனிமை மரணங்கள்

தென் கொரியா தொலைவில் ஒரு செல்வந்த நாடாக தெரிந்தாலும் அங்கு தனிமையில் மரணிக்கும் மக்களின் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனிமையில் மரணிக்கும் நடுத்தர வயது ஆண்களின் தொகை ஏனையோரிலும் அதிகமாக உள்ளது.

2021ம் ஆண்டில் தனிமையில் மரணித்த ஆண்களின் தொகை தனிமையில் மரணித்த பெண்களின் தொகையிலும் 5.3 மடங்கு அதிகம் என்று அரச கணிப்பு காட்டியுள்ளது

புதன்கிழமை தென் கொரிய அரசின் Ministry of Health and Welfare வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு 3,378 பேர் தனிமையில் மரணித்து உள்ளனர். 2017ம் ஆண்டு அத்தொகை 2,412 ஆக மட்டுமே இருந்தது.

தென் கொரியாவில் ஒருவர் உறவினர் எவரும் இன்றி தனித்து வாழ்ந்து, மரணித்து சில காலத்தின் பின் கண்டெடுக்கப்பட்டாலே அவரின் மரணம் lonely death ஆகும். இவ்வாறு மரணிக்கும் தனிமை மரண இறுதி கிரிகைகளை தொண்டர் நிறுவனங்கள் செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு தென் கொரிய அரசு Lonely Death Prevention and Management என்ற நடவடிக்கையை ஆரம்பித்து இருந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டுள் இல்லை.

இந்நிலைக்கு பிரதான காரணமாக அருகி வரும் பிறப்பு தொகையும், பிந்திய பிறப்புகளுமே.

தனிமை மரணத்தை அடைவோர் பலர் வறுமையில் இருப்பதுவும் அறியப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு 65 வயதுக்கு மேற்பட்டோரில் 43% பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து உள்ளனர்.

தென்கொரியா மட்டுமன்றி ஜப்பானும் இந்த நிலையில் உள்ளது. சீனாவும் மெல்ல இந்நிலை நோக்கி செல்கிறது.