தென் கொரிய Halloween நெரிசலுக்கு 146 பேர் பலி

தென் கொரிய Halloween நெரிசலுக்கு 146 பேர் பலி

தென் கொரியாவில் Halloween கொண்டாட்டம் நிகழ்ந்த இடத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 146 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 150 காயமடைந்து உள்ளனர். Seoul என்ற தலைநகரில் சனிக்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணித்தோரில் பெரும்பாலானவர்கள் தமது 20 வயதுகளில் உள்ள பெண்கள் என்றும் கூறப்படுகிறது.

மிகையானோர் அவ்விடத்தில் இருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி போலீசார் ஏற்கனவே அவ்விடத்துக்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடம் மிகவும் ஒடுக்கமானதும், ஏற்ற இறக்கமானதும் என்று கூறப்படுகிறது. COVID காரணமாக கடந்த 3 ஆண்டுகள் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை என்றும், இந்த ஆண்டே மீண்டும் நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது.