தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளன. தெற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவும்  Omicron என புதிய வகை கரோனா வைரஸே இந்த தடைக்கு காரணம்.

இந்த புதிய வகை வைரஸ் முதலில் தென் ஆபிரிக்காவில் காணப்பட்டது. பின்னர் Botswana, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங் காங் ஆகிய இடங்களுக்கும் பரவி உள்ளது. மொத்தமாக சில பத்து நோயாளிகளே இதுவரை இவ்வகை தொற்றை கொண்டுள்ளமை அறியப்பட்டு இருந்தாலும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக இங்கிருந்தான விமானங்கள் முடக்கப்படுகின்றன.

பொதுவாக தென் ஆபிரிக்கா, Botswana, சிம்பாப்வே, நமிபியா, Lesotho, Eswatini, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளில் இருந்தன விமானங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.

இந்த செய்தியால் மீண்டும் உலக பங்கு சந்தைகள் இன்று வெள்ளிக்கிழமை தளம்பி உள்ளன. கரோனாவின் தாக்கம் தொடரும் என்ற பயம் மீண்டும் வர்த்தக நிறுவனங்களை தாக்கி உள்ளது. அமெரிக்காவின் DOW Jones Industrial Average பங்கு சந்தை சுட்டி 905 புள்ளிகளால் (2.27%) இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே கரோனா தடுப்பு மருந்துகளை கொண்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் Omicron பரவலை தமது மருந்துகள் தடுக்குமா என்பதை ஆராய ஆரம்பித்து உள்ளனர்.