தொடர்ந்தும் தேடப்படும் Titanic உல்லாச பயணிகள்

தொடர்ந்தும் தேடப்படும் Titanic உல்லாச பயணிகள்

1912ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நியூ யார்க் சென்றபோது பனிப்பாறையில் மோதி நீருள் அமிழ்ந்த Titanic என்ற கப்பலை பார்வையிட சென்ற உல்லாச பயணிகளின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

OceanGate என்ற இந்த கலம் ஞாயிறு காணாமல் போயிருந்தது. இதில் 58 வயதான பிரித்தானிய billionaire Hamish Harding, 48 வயதான பாகிஸ்தான்/பிரித்தானிய billionaire Shahzada Dawood, அவரின் 19 வயது மகன் Suleman, 77 வயது பிரெஞ்சு Paul-Henri Nargeolet, OceanGate உரிமையாளர் Stockton Rush ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.

உல்லாச பயணிகள் ஆளுக்கு $250,000 வரை பயண கட்டணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிபந்தனையும் கையொப்பத்துடன் தெரிவிக்கப்படுள்ளது.

இவர்கள் சென்ற மூழ்கு கலத்தில் வியாழன் வரைக்கும் போதுமான சுவாச வளியே உள்ளது. அதனால் வியாழனுக்கு முன் அவர்கள் மீட்கப்படல் அவசியம். இந்த கலம் சுயமாக இயங்கும் பலத்தை கொண்டதால், ஆனால் சிறு திருப்பங்களை மட்டுமே செய்யக்கூடியது.

மேற்படி கலம் கடலின் அடியில் உள்ளதா அல்லது எங்காவது மிதக்கிறதா என்பது இதுவரை அறியப்படவில்லை. தேடல் குழுக்கள் இதுவரை சுமார் 25,000 சதுர km கடல் பரப்பளவை தேடியுள்ளனர்.

சுமார் 1,500 பயணிகளை பலியாக்கிய Titanic கப்பல் 3,810 மீட்டர் ஆழத்தில் உள்ளது. அதையே மேற்படி பயணிகள் பார்வையிட சென்றனர்.