தோல்வியில் முடிந்த சிரியா பேச்சுவார்த்தை

Syria

கடந்த 25 ஆம் திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவந்த சிரியா பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (31 ஆம் திகதி) ஏறக்குறைய முழு தோல்வியில் முடிவு பெற்றுள்ளது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான எல்லா விபரங்களையும் தெரிந்த எவரையும் இந்த தோல்வி ஆச்சரியப்பட வைக்கவும் இல்லை.

முதலில், சிரியாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் யுத்தம் ஒரு உள்நாட்டு யுத்தமல்ல. இது சவூதி மற்றும் கட்டார் உட்பட்ட சுனி இஸ்லாம் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் சியா இஸ்லாமியர்களான ஈரானுக்கும் இடையேயான அரசியல் ‘பினாமி’ யுத்தம் (proxy war). இங்கு சவுதியின் எதிரி அமெரிக்கா, இஸ்ரவேல் உட்பட்ட மேற்கு நாடுகளின் எதிரி என்றபடியால் அவர்களின் ஆசீர்வாதமும் சவுதிக்கு உண்டு. குறிப்பாக இஸ்ரவேலின் தற்போதைய இரு எதிகளில் ஒருவரான al-Assad ஐ விரட்டி இஸ்ரவேல் சார்பான ஒரு ஆட்சியை அமர்த்த அமெரிக்கா மற்றும் இஸ்ரவேல் ஆவல். அந்த நோக்கத்தையே இந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

மேற்கூறிய அமெரிக்கா சார்பு நோக்கத்தை முறியடிப்பதில் சிரியா சார்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யா கொண்டிருந்தது. ஆயுதம் ஏந்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இவர்கள் பயங்கரவாதம் என கருதும்படி இவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் முன்வைத்தார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயும்தம் ஏந்தி வன்முறைகளில் ஈடுபடுவது பயங்கரவாதம் என்றாலும் அதே கொள்கையை அமெரிக்கா சார்பு நாடுகள் சிரியா விடயத்தில் முன்வைக்க விரும்பவில்லை. இங்கே மேற்கின் நண்பன் ஆயுதம் தாங்கியவர்களுள் ஒரு பகுதியினர் (மறு பகுதி al-Qaeda சார்பானது). கபட நோக்கங்கள் நிறைந்த இந்நிலையில் பேச்சுவார்த்தை எதையும் சாதிக்க முடியாது.

யுத்தத்துக்கு தீர்வு கிடைக்காதது மட்டுமல்ல, யுத்தத்துள் அகப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை உதவிகள் வழங்குவதற்கும் இங்கு ஒரு முறையான உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்த யுத்தத்தில் ஒரு முக்கிய பங்காளரான ஈரானை பேச்சுவாத்தையில் ஈடுபட ஐ.நா. முதலில் அழைத்திருந்தாலும் பின்னர் அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக ஐ.நா. ஈரானுக்கான அழைப்பை இரத்து செய்திருந்தது.