நக்பூர் ஆயுதக்கிடங்கில் விபத்து, 17 இராணுவம் பலி

India

இந்தியாவின் நக்பூர் (Nagpur) நகருக்கு அண்மையில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கு ஒன்றில் செய்வாய் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 17 இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். மேலும் 20 இராணுவத்தினர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
.
இந்த ஆயுத கிடங்கே இந்தியாவில் உள்ள மிக பெரிய ஆயுத கிடங்காகும். Pulgaon என்ற இந்த ஆயுத கிடங்கு நக்பூரில் இருந்து 110 km தென்மேற்கே உள்ளது. இந்த ஆயுத கிடங்கு சுமார் 7,000 ஏக்கர் அளவிலானது.
.
உள்ளூர் நேரப்படி செய்வாய் அதிகாலை 1:00 மணிக்கு இந்த விபத்து இடம்பெறுள்ளது. விபத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பின் பொருட்டு தூர இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்தனர். இரவு முழுவதும் போராடிய தீ அணைக்கும் படை காலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
.