நடுவானில் இந்திய விமானிகள் சண்டை

JetAirways

கடந்த புதுவருட தினத்தன்று இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து மும்பை (Mumbai) வந்த Jet Airways விமானிகள் நடுவானில் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர். சண்டையில் ஈடுபட்ட ஆண் விமானியும் (pilot), பெண் உப-விமானியும் (co-pilot) தற்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
.
வாக்குவாத சண்டையின் இறுதியில் விமானி, உப-விமானியை அடித்ததாகவும், அதனால் உப-விமானி விமானிகள் கூடத்திலிருந்து (cockpit) அழுதுகொண்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் உப-விமானி மீண்டும் விமானிகள் கூடம் செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
.
செவ்வாய் கிழமை Jet Airways வெளியிட்ட அறிக்கையின்படி விசாரணைகளின் பின் இருவரும் Jet Airways விமான சேவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
.
அந்த விமானத்தில் 324 பயணிகளும், 14 விமான பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.
.