நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்து பெரு நகரான Milwaukee க்கு மேற்கே உள்ள புறநகரான Waukesha இன்று ஞாயிறு பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்ற நத்தார் ஊர்வலத்தினூடு (Christmas parade) SUV வகை வாகனம் ஒன்று வேகமாக சென்று மோதியதால் சிலர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

இந்த மோதலுக்கு சிலர் பலியாகி உள்ளதாக போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர் தொகையை இதுவரை அறிவிக்கவில்லை. பலியானோர் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை.

வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டவர் தொகை 28 என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

ஒரு சிறுவர்கள் குழுவும் அகப்பட்டு கொண்டதால் சில சிறுவர்களும் பலியாகி அல்லது காயமடைந்து உள்ளனர். இங்கு பாடசாலைகளுக்கு நாளை திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சந்தேகநபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் விபரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.