நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோற்றார் இம்ரான்

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோற்றார் இம்ரான்

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 174 வாக்குகள் பெற்று இம்ரானை பதவியில் இருந்து நீக்குகிறது. அவையின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 342 மட்டுமே.

இந்த தீர்மானத்தின்படி அவை புதியதோர் பிரதமரை திங்கள் தெரிவு செய்யும். எதிர்க்கட்சி தலைவரான Shehbaz Sharif என்பவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. இவர் முன்னாள் பிரதமர் Nawaz Sharif இன் சகோதரர்.

தெரிவி செய்யப்படவுள்ள பிரதமர் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பதவியில் இருக்கலாம். அதன் பின் பொது தேர்தல் இடம்பெறும்.

அமெரிக்காவே தன்னை பதவியில் இருந்து விரட்டியதாக இம்ரான் கான் கூறியுள்ளார். ரஷ்யா யுகிரைனுள் நுழைந்த பின் இம்ரான் கான் ரஷ்யாவுக்கு சென்று ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இம்ரானின் கூட்டணி கட்சி ஒன்று அண்மையில் அதன் ஆதரவை நிறுத்தி இருந்தது. அதனால் இம்ரான் பெரும்பான்மை ஆதரவை இழந்து இருந்தார்.