நாசாவின் Orion பரீட்சை வெற்றிகரம்

Orion

அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே.
.
மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் பயணித்த இந்த கலம் இரண்டு தடவைகள் பூமியை வலம் வந்து இருந்தது. இது முதல் சுற்றில் 270 km உயரத்திலும் இரண்டாம் சுற்றில் 5794 km உயரத்திலும் பயணித்து இருந்தது. தற்போது உலகை வலம்வரும் International Space Station 431 km உயரத்தில் மட்டுமே வளம் வருவது குறிப்பிடத்தக்கது.
.
இந்த Orion திட்டத்துக்கு இதுவரை சுமார் US$ 9.1 பில்லியன் செலவாகி உள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பம் தேவையான அளவு வளர்ந்திருந்தாலும் பொருளாதார இம்முயற்சிகளுக்கு இடராகவே இருக்கும்.
.
மனிதரை காவும் Orion கலம் மற்றும் ஏவு கலம் உள்ளடங்க மொத்தம் 242 அடி உயரம் கொண்ட இந்த மொத்தக்கலம் சுமார் 2 மில்லியன் pounds (ibf) உந்தத்துடன் ஏவப்பட்டு இருந்தது. தற்போதைய மிகப்பெரிய பயணிகள் விமானம் A380இனது இயந்திரம் ஒன்று (மொத்தம் 4 உள்ளது) சுமார் 70,000 lbf உண்டு விசையை மட்டுமே கொண்டது.