நிதி அமைச்சரை பலியாக்கி தப்ப முனையும் பிரதமர் டிரஸ்

நிதி அமைச்சரை பலியாக்கி தப்ப முனையும் பிரதமர் டிரஸ்

பிரித்தானியா பிரதமர் டிரஸ் தனது நிதி அமைச்சரை பலியாக்கி தவறுகளில் இருந்து தான் தப்ப முனைகிறார். Kwasi Kwarteng என்ற நிதி அமைச்சரை பதவியில் இருந்து விலக்கியது மட்டுமன்றி அவர் நடைமுறை செய்யவிருந்த வரி குறைப்பு திட்டங்களையும் பிரதமர் டிரஸ் கைவிடுகிறார்.

முதலில் பிரதமர் டிரஸ் நிதி அமைச்சரின் வரி திட்டங்களுடன் உடன்பட்டு இருந்தாலும், அந்த திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு உருவாக அந்த திட்டங்களில் இருந்து தன்னை விடுவித்து தப்ப முனைகிறார் டிரஸ்.

ஆனாலும் தற்போது இங்கிலாந்தில் ஒரு பொது தேர்தல் இடம்பெற்றால் டிரஸ் அல்லது அவரின் கட்சி வெல்லும் வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

சுமார் 37 தினங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த டிரஸ் அரசு தற்போது ஆட்டம் காண ஆரம்பித்து உள்ளது. அமெரிக்காவை நம்பி, குறிப்பாக முன்னாள் சனாதிபதி டிரம்பை நம்பி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பிரித்தானிய தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக உடன்படிக்கை இடம்பெறவில்லை.

Jeremy Hunt என்ற முன்னாள் வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சர் தற்போது நிதி அமைச்சர் ஆகியுள்ளார். இவர் டிரஸுக்கு பதிலாக Rishi Sunak என்பவரை ஆதரித்து இருந்தவர். அதனால் இவரின் தெரிவு கட்சிக்குள் மூண்ட எதிர்ப்பை தணிக்கும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கும்.