நித்தியானந்தா இலங்கையில் அகதிக்கு விண்ணப்பம்?

நித்தியானந்தா இலங்கையில் அகதிக்கு விண்ணப்பம்?

தன்னை ஒரு சாமி என்று கூறி குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் நித்தியானந்தா இலங்கை அரசிடம் அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது பாலியல் குற்றங்களுக்காக வழக்கு ஒன்று கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் திகதி கர்நாடகா மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பிணையில் செல்ல முடியாத (non-bailable) கைதுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதனால் நித்தியானந்தா இந்தியா செல்வது சாத்தியம் அல்ல.

இலங்கையில் அகதி நிலை பெற நித்தியானந்தா தனது உடல் நல குறையை காரணம் காட்டியுள்ளார். அறியப்படாத இடத்தில் உள்ள தனது ஸ்ரீ கைலாசாவில் (Sri Kailasa) தனது நோய்க்கு மருத்துவம் இல்லை என்று இவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விமானத்தில் பறந்து வரவுள்ள இவருக்கு இன்னோர் நாட்டின் அதிபருக்கு உரிய வசதிகள், வரவேற்புகள் செய்யவேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் இவர் Sri Kailasa என்ற அறியப்படாத நாட்டு அதிபர் என்று காரணம் காட்டப்பட்டுள்ளது.

இவர் முன்னர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் பிணையில் வெளியேறிய காலத்தில் இந்தியாவை விட்டு தப்பி ஓடியிருந்தார்.