நியூசிலாந்தில் 477 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி

நியூசிலாந்தில் 477 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி

Chatham Islands என்ற நியூசிலாந்து தீவு ஒன்றின் கரையில் ஒதுங்கிய 477 pilot whale எனப்படும் திமிங்கிலங்கள் பலியாகி உள்ளன. கரை ஒதுங்கிய பின் இவற்றில் பல இயற்கையாகவே பலியாகி இருந்தாலும் சில அதிகாரிகளால் வேறு வழி இன்று கொலை செய்யப்பட்டு உள்ளன.

Chatham தீவுகள் நியூசிலாந்தின் பிரதான தீவில் இருந்து சுமார் 800 km கிழக்கே உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 600 பேர் மட்டுமே வாழ்கின்றனர்.

போதிய மனித பலம் இல்லாமையாலும், அக்கடல் பகுதி மனிதரை தாக்கும் சுறாக்கள் (shark) நிறைந்து என்றபடியால் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களை காப்பாற்ற முடியவில்லை என்று Project Jonah என்ற திமிங்கில பாதுகாப்பு குழு கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை Tupuangi கரையில் 232 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதாகவும், மேலும் 245 திங்கள் Waihere குடா பகுதியில் ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஏன் திமிங்கிலங்கள் கூட்டாக கரை ஒதுங்குகின்றன என்று விஞ்ஞானம் அறியாது. அனால் அவை கரைக்கு மிக அண்மையில் வரும்போது பெரும் அலைகள் அவற்றை கரைக்கு தள்ளிவிடும். அதன் பின் அவற்றால் தாமாக நீருக்கும் செல்ல முடியாது.