நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

நிலநடுக்க நேரத்தில் வானத்திலும் ஒளி?

சில தினங்களுக்கு முன் மொராக்கோவில் 6.8 அளவில் நிலநடுக்கம் இடம்பெற்றது. அப்போது வானத்திலும் பிரகாசமான ஒளி இடம்பெற்றுள்ளது. இதை நில நடுக்க ஒளி (earthquake light) என்கின்றனர்.

விஞ்ஞானம் இந்த ஒளிக்கான காரணத்தை திடமாக கூறவில்லை. பதிலுக்கு சில அனுமானங்களையே முன்வைத்துள்ளது.

மொராக்கோவில் மட்டுமன்றி முன்னரும் பல நில நடுக்கங்கள் வானத்தில் நில நடுக்க ஒளியை கொண்டிருந்தன. தற்போது மக்களின் தொலைபேசிகளில் வீடியோ வசதிகள் உள்ளதால் இவ்வகை ஒளி ஆதாரங்கள் கிடைக்கின்றன.

2007ம் ஆண்டு Pisco என்ற Peru நாட்டு பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஏற்படுத்திய வானத்து ஒளி security வீடியோ கருவி ஒன்றில் பதிவாகி உள்ளது.

2008ம் ஆண்டு சீனாவின் Sichuan பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கமும் 30 நிமிடங்களுக்கு முன் வானத்தில் பெரிய நில நடுக்க ஒளியை கொண்டிருந்தது.

1600ம் ஆண்டுகளில் இருந்து இவ்வகை செய்திகள் கூறப்பட்டு உள்ளன. ஆனால் தற்கால தொலைபேசி விடியோக்கள் ஆதாரங்களை தருகின்றன.

பொதுவாக 5.0 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவிலான நடுக்கங்களே இவ்வகை ஒளியை கொண்டுள்ளன. இவை சுமார் 600 km தூரம் வரையில் தெரியும்.