நீர் கொள்கலனையே குண்டென்று அமெரிக்கா தாக்கியது

நீர் கொள்கலனையே குண்டென்று அமெரிக்கா தாக்கியது

நிலைமைக்கு ஏற்ப திட்டமிடாது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து திடீர்ரென வெளியேறிய பின் தலிபான் வேகமாக முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி இருந்தது. அதனால் பைடென் அரசு அவமானப்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள ISIS-K அமைப்பு பெரும் தாக்குதல் ஒன்றை காபூல் விமான நிலையத்துக்கு வெளியே செய்திருந்தது. அந்த தாக்குதலுக்கு 13 அமெரிக்க படையினர் உட்பட சுமார் 180 பேர் பலியாகி இருந்தனர்.

அவமானத்தில் இருந்த பைடென் அரசு சுடச்சுட எதிர் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி வெற்றி கொண்டாட முனைந்தது.

ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி பைடென் அரசு ஒரு ஆளில்லா விமானம் மூலம் Hellfire ஏவுகணை தாக்குதலை ஒன்றை காபூல் அருகே செய்து, இன்னோர் தாக்குதலுக்கு தயாராக இருந்த ISIS-K பயங்கர வாதியை கொலை செய்து, தாக்குதலையும் முறியடித்ததாக கூறி இருந்தது. ஆனாலும் அந்த தாக்குதல் மீது சந்தேகங்கள் எழுந்தன.

தற்போது அமெரிக்காவின் இரண்டு முன்னணி பத்திரிகைகளான The New Times மற்றும் The Washington Post விசாரணைகள் தாக்கப்பட்டது அமெரிக்காவால் குண்டல்ல, வெறும் நீர் கொள்கலனே என்று அறிந்துள்ளன.

இந்த தாக்குதலின் குறி 43 வயதுடைய Zemari Ahmadi என்ற பொறியிலாளரே. இவர் அமெரிக்காவின் Nutrition and Education International என்ற தொண்டர் நிறுவனத்தில் 2006ம் ஆண்டு முதல் பணியாற்றியவர். தலிபான் ஆட்சிக்கு பயந்து அமெரிக்காவுக்கு செல்ல அகதி விசாவுக்கும் விண்ணப்பித்து இருந்தவர்.

அமெரிக்காவின் வேவு பார்த்தல் தாக்கப்பட்டவர் குண்டு ஒன்றை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்ததாக கூறினாலும், அருகில் இருந்த CCTV விடியோக்கள் அவர் நீர் எடுத்துவர பயன்படும் கொள்கலன் என்று காட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இவருடன், 2 வயது சிறுமி உட்பட 10 பேர் பலியாகி இருந்தனர். அதில் இவரின் 3 பிள்ளைகளும் அடங்கும்.

தாக்குதலுக்கு உள்ளன வெள்ளை வாகனம் தமது நிறுவனத்துக்கு உரியது என்று கலிபோனியாவை தளமாக கொண்ட Nutrition and Education International அமைப்பின் தலைவர் Steven Kwon The Washington Post பத்திரிகைக்கு கூறியுள்ளார்.