நெருக்கடியால் இம்ரான் கட்சி உறுப்பினர் அரசியலிருந்து ஒதுங்கல்

நெருக்கடியால் இம்ரான் கட்சி உறுப்பினர் அரசியலிருந்து ஒதுங்கல்

பாகிஸ்தான் அரசும் அதன் அதன் இராணுவமும் இம்ரான் கானின் கட்சி (PTI, Pakistan Tehreek-e-Insaf) உறுப்பினர்களுக்கு வழங்கும் பாரதூர கொடுபிடிகளால் கட்சியின் சில உயர் பதவி உறுப்பினர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி வருகின்றனர்.

இம்ரான் அரசில் Information துறைக்கு அமைச்சராக இருந்த Fawad Chaudhry இன்று புதன் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 75 ஆண்டுகளாக பாகிஸ்தானை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆட்சி செய்யும் பலமிக்க இராணுவத்துடன் பெருமளவு மக்களின் ஆதரவை கொண்ட இம்ரான் போராடி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை முன்னாள் Human Rights அமைச்சர் இம்ரானின் கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் நீங்குவதாக கூறியிருந்தார். இவர் 12 தினங்கள் தடுப்பில் வைக்கப்பட்டு இருந்தார்.

Asad Umar என்ற முன்னாள் PTI கட்சி நிதி அமைச்சரும் தடுப்பு காவலில் இருந்து விடுதலை பெற்ற உடனே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இம்ரானின் PTI கட்சியை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தற்போது ஆட்சியில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் Khawaja Asif கூறியுள்ளார்.