நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் செல்ல தடை

நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் செல்ல தடை

நேபாளம் தனது நாட்டவர் ரஷ்யாவுக்கும், யூக்கிறேனுக்கும் செல்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்துள்ளது. நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் ஆகிய நாடுகளால் தமது நாடுகளின் இராணுவங்களுடன் இணைந்து போராட அழைக்கப்படுகின்றனர் என்று நேபாள் அறிந்த பின்னரே இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

குறைந்தது 10 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிட்டு மடிந்து உள்ளதாகவும், சுமார் 200 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிடுவதாகவும் கூறப்படுகிறது.

யூக்கிறேன் இராணுவத்துடனும் நேபாளத்தினர் இணைந்து சண்டையிடுகின்றனர்.

கூர்க்கா என்று அழைக்கப்படும் நேபாளத்தினர் 1947ம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றுக்கு அமைய பிரித்தானிய படைகளிலும் பணியாற்றினர்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போராட முன்வரும் வெளிநாட்டவருக்கு ரஷ்யா குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது.