நேரு காலத்தை புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர் மீது மோதி அரசு விசனம்

நேரு காலத்தை புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர் மீது மோதி அரசு விசனம்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஒரு காலத்தில் நேருவை கொண்ட இந்திய Lok Sabha வில் இன்று சுமார் அரைப்பங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் criminal குற்றச்சாட்டு வழக்குகளை கொண்டவர்கள் என்று கூறியுள்ளார். அவரின் கூற்று “almost half the MPs in the Lok Sabha have criminal charges pending against them” என்றுள்ளார்.

Lee குறிப்பிட்டது இன்னோர் அமைப்பின் அறிக்கையே. அந்த அறிக்கை இந்தியாவில் 43% பாராளுமன்ற உறுப்பினர் மீது criminal குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன என்று கூறியுள்ளது.
ஒரு நலமான சனநாயகம் இலகுவில் அழிந்து போகலாம் (go downhill) என்பதை விபரிக்கவே இந்தியாவை உதாரணமாக காட்டி உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.

ஆனால் சிங்கப்பூர் பிரதமரின் கூற்றால் விசனம் கொண்டுள்ளது மோதி அரசு. பொதுவாக காங்கிரஸ் உறுப்பினர் எல்லோரையும் வெறுக்கும் பா.ஜா. காங்கிரஸ் கட்சியின் நேருவை சிங்கப்பூர் பிரதமர் புகழ்ந்து, மோதி அரசை சாடுவதை விரும்பவில்லை. பா.ஜா. எப்போதும் நேருவை சாடி வந்துள்ளது. நேருவை ஒரு முழுமையான இந்து அல்ல என்று காண்கிறது பா.ஜா.

அதேவேளை இந்தியாவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சிங்கப்பூர் பிரதமரின் கூற்றை பயன்படுத்தி பா.ஜா. அரசை சாடி வருகின்றனர்.