நையீரிய அகதி முகாமில் தற்கொலை தாக்குதல், 60 பலி

Nigeria

நையீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றை இரண்டு பெண் தற்கொலை தாக்குதல்காரர் தாக்கியதில் 60 வரையானோர் பலியாகி உள்ளனர். அத்துடன் 80 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
.

இதுவரை எவரும் இந்த தாக்குதலுக்கு உரிமை கொள்ளவில்லை.
.
Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு இஸ்லாமிய ஆட்சியை அமைக்க 2009 முதல் முனைகின்றனர். இந்த யுத்தத்துக்கு இருவரை 17,000 பேர் வரை பலியாகியும், 2.6 மில்லியன் வரையானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
.
Dikwa என்றழைக்கப்படும் இந்த அகதிகள் முகாமில் சுமார் 50,000 அகதிகள் தங்கியுள்ளனர். இந்த முகாமில் இருந்தோர் Boko Haramமால் விரட்டப்பட்டவரே.
.