நோயாளிக்கு அமெரிக்காவில் முதலாவது பன்றி இருதயம்

நோயாளிக்கு அமெரிக்காவில் முதலாவது பன்றி இருதயம்

அமெரிக்க நோயாளி ஒருவருக்கு உலகின் முதலாவது பன்றி இருதய மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு ஏற்ப அமையும்படி genetically மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்தே இந்த இதயம் பெறப்பட்டு உள்ளது.

David Bennett என்ற 57 வயது இருதய நோயாளிக்கு சாத்தியமான வைத்தியம் எதுவும் இன்றிய நிலையில் மரணம் உறுதியாக இருந்தது. இந்த நிலையிலேயே அரசின் விசேட அனுமதியுடன் இந்த பரிசோதனை முயற்சி இடம்பெற்று உள்ளது.

University of Maryland Medical Center என்ற வைத்தியசாலையில் செய்யப்பட்ட இந்த பரிசோதனை எவ்வளவுக்கு வெற்றிகரமானதாக இருக்கும் என்பதை காலம்தான் கூறும்.

2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்னோர் நோயாளி பன்றி கல்லீரல் ஒன்றை பெற்று இருந்தார். ஆனால் அவர் பாரிய மூளை பாதிப்பால் குணமடையவில்லை.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 100,000 நோயாளிகள் இவ்வாறான அங்க மாற்றீடுகளை வேண்டி உள்ளனர்.