பங்களாதேசில் ஆளும் கட்சி வென்றது, வாக்களிப்பு 40%

பங்களாதேசில் ஆளும் கட்சி வென்றது, வாக்களிப்பு 40%

நேற்று ஞாயிரு பங்களாதேசத்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் ஆளும் கட்சியான Awami League மீண்டும் வெற்றி பெறுகிறது. சட்டப்படியான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாவிடினும் தேர்தல் இடம்பெற்ற 299 தொகுதிகளில் Awami இதுவரை 216 இடங்களை வென்றுள்ளது.

அதனால் பிரதமர் Sheikh Hasina தொடர்ந்து 4 ஆவது தடவையாக பிரதமர் ஆகிறார். இவர் முன்னரும் ஒருமுறை பிரதமராக பதவி வகித்தவர்.

எதிர் கட்சியான Bangladesh National Party (BNP) பல்லாயிரம் தனது தலைவர்கள், ஆதரவாளர் சிறைப்பிடிக்கப்பட்டதால் தேர்தலை பகிஷ்காரம் செய்துள்ளது. அதனால் 40% வாக்காளர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். 2018ம் ஆண்டு வாக்களிப்பு வீதம் 80% ஆக இருந்தது.

அந்த நாட்டு நீதி அமைச்சர் தாம் 10,000 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

தேர்தலை நியாயப்படுத்த ஆளும் கட்சி பல கைப்பொம்மை வேட்பாளர்களை போட்டியிட வைத்திருந்தது. அதனால் மொத்தம் 52 சுயேட்சை  வேட்பாளரும் கூடவே வெற்றி பெற்று இருந்தனர்.

தேர்தலுக்கு முன் 18 தீவைப்புகள் இடம்பெற்றன.