பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேசத்து Jhalakathi பகுதியில் பயணிகள் கப்பல் (ferry) ஒன்று தீக்கு உள்ளானதால் குறைந்தது 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த கப்பல் தலைநகர் டாக்காவில் இருந்து Barguna என்ற இடம் நோக்கி பயணிகையிலேயே தீக்கு உலானது.

சிலர் நீருள் குதித்து இருந்தாலும் பின் நீருள் அமிழ்ந்து பலியாக, அவர்களில் சிலர் தப்பி உள்ளனர்.

MV Avijan 10 என்ற இந்த 3 தட்டுக்களை கொண்ட பயணிகள் கப்பலில் சுமார் 500 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இயந்திர அறையில் உருவான தீயே கப்பலின் ஏனைய பகுதிகளுக்கு பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பங்களாதேசத்தில் அவ்வப்போது இவ்வகை பயணிகள் கப்பல்கள், படகுகள் விபத்துக்கு உள்ளாவது உண்டு. அங்கு இவ்வகை பயணங்களை மேற்கொள்வோர் பொதுவாக ஏழை மக்களே.