பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேசத்து தொழிற்சாலை தீவிபத்து ஒன்றுக்கு குறைந்தது 52 பேர் பலியாகி உள்ளனர். Hashem Food and Beverage என்ற தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து 25 km கிழக்கே உள்ள Rupgani என்ற இடத்தில் உள்ள இந்த 6 மாடி தொழிற்சாலை நூடில்ஸ், அடைக்கப்பட்ட குளிர்பானம் ஆகியன தயாரிக்கும் தொழிற்சாலையாகும்.

இந்த தீ உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் மடியில் இரண்டு படிகளுக்குமான வாசல்கள் பூட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தீயின்போது அந்த தளத்தில் 48 பேர் இருந்துள்ளனர்.