பசிபிக்கை சுற்றி தொடர்ச்சியாக நிலநடுக்கம்

RingOfFire

கடந்த சில நாட்களாக பசுபிக் கடலின் மேற்கேயும், கிழக்கேயும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் பல சிறிய அளவிலானவை என்றாலும் சில மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்களாக இருக்கின்றன.
.
தென் அமெரிக்க நாடான எக்குவடோரை இன்று சனிக்கிழமை 7.8 Richter அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுமார் 50 செக்கன்கள் இடம்பெற்ற இதற்கு இதுவரை 28 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. US Geological Service இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 19 km நிலத்துக்கு அடியில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
.
சில மணித்தியாலங்களுக்கு முன்னர், ஜப்பானின் தென்மேற்கில் உள்ள Kumamoto என்ற நகரை சனிக்கிழமை 7.3 அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இங்கு கடந்த வியாழன் இன்னுமோர் பாரிய நிலநடுக்கமும் தாக்கியுள்ளது. இவற்றிடையே பல சிறிய அளவிலான நடுக்கங்கள் அவ்விடத்தை தாக்கியுள்ளன.
.
ஜப்பானிய Kumamoto நகரின் நடுக்கங்களுக்கு இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 2,000 பேர் வரை காயமடைந்து உள்ளனர். மேலும் 160,000 பேர் வரை முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
.
GPS தரவுகளின்படி Minami Aso என்ற கிராமத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு புள்ளி தென்கிழக்காக 97 cm நகர்ந்தும், 23 cm உயர்ந்தும் உள்ளதாம். வேறு ஒரு புள்ளி 75 cm வடகிழக்காக நகர்ந்தும், 20 cm உயர்ந்தும் உள்ளதாம்.

.