பசி கொடுமை சுட்டியில் இந்தியாவுக்கு 111ம் இடம்

பசி கொடுமை சுட்டியில் இந்தியாவுக்கு 111ம் இடம்

Concern Worldwide என்ற அயர்லாந்து அமைப்பும் Welthungerhilfe என்ற ஜேர்மன் அமைப்பும் இணைந்து செய்த 2023ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (Global Hunger Index) இந்தியா 111ம் இடத்தை அடைந்துள்ளது. இந்த கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 125 மட்டுமே.

பாகிஸ்தான் 102ம் இடத்தில் உள்ளது. ஆப்கானித்தான் 114ம் இடத்தில் உள்ளது. அதன்படி இந்தியா பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ளது. வட கொரியா 106ம் இடத்தில் உள்ளது.

இந்தியா பின் தள்ளப்பட்டமைக்கு மேற்படி ஆய்வின் கணிப்பு முறை தவறானது என்கிறது இந்தியா.

பொருளாதார இடரில் அகப்பட்டு முறிந்து போன இலங்கை 60ம் இடத்தில் உள்ளமை இங்கு குறிப்பிட தக்கது.

பங்களாதேசம் 81ம் இடத்தில் உள்ளது.

சீனா முதல் 20 இடங்களை பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற செல்வந்த நாடுகள் கணிப்புக்கு எடுக்கப்படவில்லை.

https://www.globalhungerindex.org