படப்பிடிப்பு சூட்டுக்கு ஒருவர் பலி, ஒருவர் காயம்

படப்பிடிப்பு சூட்டுக்கு ஒருவர் பலி, ஒருவர் காயம்

அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற Rust என்ற ஆங்கில படப்பிடிப்பு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூடு ஒன்றுக்கு 42 வயதுடைய Halyna Hutchins என்ற திரைப்பட படப்பிடிப்பாளர் (cinema photographer) பலியாகியதுடன், 48 வயதுடைய Joel Souza என்ற director காயமடைந்தும் உள்ளார்.

திரைப்பட படப்பிடிப்பு செய்யும் வேளைகளில் துப்பாக்கி சூடுகளின் உண்மைத்தன்மையை காண்பிக்க உண்மை துப்பாக்கிகளை (prop gun) பயன்படுத்துவது உண்டு. உண்மை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டாலும் குண்டுகள் (bullet) மாற்றத்துக்கு உட்படும். அதில் உள்ள வெடிமருந்து உண்மையான வெடிமருந்து என்றாலும், பாயும் குண்டு இருக்காது. பதிலுக்கு சீறி பாயாத பருத்தி போன்ற மெதுமையான பொருட்களால் செய்யப்பட்ட அடைப்புகள் இருக்கும். திரையில் இவ்வகை துப்பாக்கி சூடு சீறும் புகையுடன் உண்மை துப்பாக்கி போல் காணப்படும்.

ஆனாலும் நடிகருக்கு வழங்கப்படட துப்பாக்கியுள் உண்மை குண்டு இருந்துள்ளது. இதை Baldwin அறிந்து இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உதவி director இந்த துப்பாக்கியை நடிகரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.

துப்பாக்கியால் சுட்டவர் Alec Baldwin என்ற நடிகர். Alec Baldwin நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் Trump போல் கதைத்து நடிப்பதில் பிரபலமானவர்.

Brandon Lee (Bruce Lee என்ற Hong Kong நடிகரின் மகன்) 1993ம் ஆண்டு இவ்வகை படப்பிடிப்பு ஒன்றில் பயன்படுத்திய துப்பாக்கி சூட்டுக்கு தனது 28ம் வயதில் பலியாகி இருந்தார். The Craw என்ற திரைப்படம் ஒன்றுக்கான படப்பிடிப்பு ஒன்றின் பொழுதே இந்த மரணம் நிகழ்ந்தது.

1984ம் ஆண்டு நடிகர் Jon-Erik Hexum தவறுதலாக தன்னை தானே சுட்டு பலியாகி இருந்தார். Cover Up என்ற தொலைக்காட்சி படப்பிடிப்பு வேளையிலேயே இது இடம்பெற்றது.

நடிகர் M.R. ராதா 1967ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி நடிகர் எம்.ஜி.ஆரையும் சுட்டு இருந்தனர். அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கி. அதில் இருந்த குண்டுகளும் உண்மையானவை. எம்.ஜி.ஆரை சுட்ட M.R. ராதா தன்னையும் சுட்டு இருந்தார். இருவரும் தப்பி இருந்தனர்.