பணம் இருந்தும் கடனில் முறிகிறதா ரஷ்யா?

பணம் இருந்தும் கடனில் முறிகிறதா ரஷ்யா?

இலங்கை அண்மையில் டாலர் இன்மையால் தனது வெளிநாட்டு bond கடன்களை அடைக்க முடியாது கடனில் முறிந்து இருந்தது. ஆனால் ரஷ்யா தேவையான பணம் இருந்தும் வெளிநாட்டு கடனில் முறிகிறது என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. ஆனால் அவ்வாறு தான் முறியவில்லை என்கிறது ரஷ்யா.

ரஷ்யாவுக்கு சுமார் $40 பில்லியன் bond கடன் உள்ளது. அதேவேளை ரஷ்யாவிடம் யூகிரைன் யுத்தத்துக்கு முன் $640 பில்லியன் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பாக இருந்துள்ளது. ரஷ்யாவின் கையில் உள்ள $640 பில்லியன் அதன் $40 பில்லியன் கடனை அடைக்க போதுமானது.

ஆனால் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடைகள் காரணமாக ரஷ்யாவின் பணம் மேற்கு நாடுகளின் வங்கிகளில் முடக்கப்பட்டு உள்ளன. அதனாலேயே ரஷ்யாவால் கடனை அடைக்க முடியாது உள்ளது.

மே மாதம் வழங்கப்படவிருந்த கடன் ஒன்றுக்கான $100 மில்லியன் வட்டி ஜூன் மாதம் 27ம் திகதி ஒரு மாத அவகாசத்தையும் (grace period) செலுத்தப்படாது உள்ளது. கடனை வழங்கியவர் இதுவரை தமது  வட்டியையோ பெறவில்லை என்று கூறுகின்றனர். தடை காரணமாக வட்டியை கடன் வழங்கியவர் பெற முடியாது.

உலகம் மேற்கு நாடுகளின் வங்கிகளிலும், அமெரிக்க டாலரிலும் தங்கி இருப்பதன் ஆபத்தை மேற்படி உதாரணம் காட்டுகிறது.