பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

தனது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த மியன்மார் நாட்டு பெண்ணை காயத்திரி முருகையன் (Gaiyathiri Murugaran) என்ற வீட்டுக்காரிக்கு அடித்து, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக இன்று செவ்வாய் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் பலியான Piang Ngaih Don என்ற 24 வயதுடைய பணிப்பெண் மேற்படி குடும்பத்தில் 1 ஆண்டு அளவிலேயே பணி செய்து வந்துள்ளார். இப்பெண் காலால் மிதித்து, கழுத்தை நெரித்து, தும்புத்தடியால் அடித்து, இரும்பால் சுட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார் என்கின்றன நீதிமன்ற ஆவணங்கள்.

வயது 41 கொண்ட காயத்திரி மட்டுமன்றி சிலவேளைகளில் 61 வயதுடைய அவளில் தாயும் கூடவே பணிப்பெண் மீது தாக்குதல் செய்துள்ளார். காயத்திரியின் கணவர் ஒரு சிங்கப்பூர் போலீசார்.

காயத்திரி மீது homicide வழக்கே தொடரப்பட்டு இருந்தது. அதனாலேயே அவர் மரண தண்டனையில் இருந்து தப்பி உள்ளார். அவர் மீது murder வழக்கு தொடரப்பட்டு இருந்தால், அவருக்கு மரண தண்டனையும் கிடைத்திருக்கலாம்.

அந்த குடும்பத்தில் உள்ள 4 மற்றும் 1 வயது குழந்தைகளை பாராமரிக்கவே பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தார். சிறிதளவு உணவே மட்டுமே வழங்கப்பட்டதால் மரணிக்கும் காலத்தில் பணிப்பெண் 24 kg (53 lb) எடையை மட்டுமே கொண்டிருந்தார். அவர் தினமும் 5 மணித்தியாலங்கள் மட்டுமே துயில அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சிங்கப்பூரில் சுமார் 250,000 வறிய நாட்டு பெண்கள் பணிப்பெண் வேலை செய்கின்றனர்.