பதவியை இழக்கிறார் தென்கொரிய ஜனாதிபதி?

ParkGeunHye

தென்கொரியாவின் ஜனாதிபதி Park Geun-hye தனது பதவியை விரைவில் இழக்கக்கூடும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இன்று வெள்ளி இவர் மீதான குற்ற பிரேரணை (impeachment) வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுவது உறுதி ஆயிற்று. இவர் மீது குற்ற பிரேரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் 234 வாக்குகளால் நிறைவேறி உள்ளது. மொத்தம் 300 உறுப்பினரை கொண்ட சபையில் 200 வாக்குகள் மட்டுமே வேண்டியிருந்தது.
.
இவரை குற்ற விசாரணை செய்தல் வேண்டும் என ஆதரித்த உறுப்பினரில் சுமார் 70 உறுப்பினர் இவரின் கட்சியை சார்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் 63% மக்கள் ஆதரவை கொண்டிருந்த இவர் தற்போது 4% ஆதரவை மட்டுமே கொண்டுள்ளார்.
.
இவர் மீதான விசாரானை உறுதியான பின், இவரின் பதவிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, பிரதமர் Hwang Kyo-ahn இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். குற்றம் உறுதி செய்யப்படிங், புதியதோர் ஜனாதிபதி தேர்தல் 60 நாட்களுள் இடம்பெற்றல் வேண்டும்.
.
2012 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்திருந்த Park Geun-hye தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இவரின் தந்தை Park Chung-hee 1963 முதல் 1979 வரை பதவியில் இருந்த தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியாவார்.
.

தனது நீண்டகால நண்பியான Choi Soon-sil அரச கருமங்களில் ஊழல்கள் செய்ய வழிசெய்தார் என்பதே இவர் மீதான குற்றசாட்டாகும். இந்த ஊழல்கள் மூலம் Choi பல மில்லியன் டொலர்களை இலாபம் அடைந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
.