பலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து அமெரிக்க படையினன் தீக்குளிப்பு

பலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து அமெரிக்க படையினன் தீக்குளிப்பு

பலஸ்தீனர் விடுதலைக்கு ஆதரவளித்து அமெரிக்க விமானப்படை உறுப்பினர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்னாள் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து மரணித்து உள்ளார். அமெரிக்க படையினர் ஒருவர் தீக்குளிப்பது இதுவே முதல் தடவை.

Aaron Bushnell என்ற இந்த 25 வயது படையினன் காசா யுத்தத்தில் அமெரிக்கா கண்மூடித்தனமாக இஸ்ரேலுக்கு வழங்குவதை கண்டித்து, “I will no longer be complicit in genocide” என்று கூறியபடியே தனக்கு தானே தீ மூட்டி உள்ளார். தீ பற்றிய இவர் “Free Palestine” என்று கூறியபடியே நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இவர் தனது Twitch பதிவில் ” I am about to engage in an extreme act of protest. But compared to what people have been experiencing in Palestine at their hands of their colonizers – it’s not extreme” என்று கூறியுள்ளார்.

அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வைத்தியசாலையில் மரணமானார்.

இவர் Texas மாநிலத்து San Antonio என்ற நகரில் வாழ்பவர்.