பலஸ்தீனர்க்கு பட்டமும் ஆயுதம்

Kite

தமது விடுதலைக்காக போராடும் பலஸ்தீனர் புதிதாக விலை மலிந்த ஆயுதம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தற்போது பட்டங்களின் வால்களில் தீப்பந்தம் கட்டி, அந்த பட்டத்தை பறக்கவிட்டு, பின்னர் அதை இஸ்ரேலின் பக்கம் அறுத்து விடுகிறார்கள். அதனால் இஸ்ரேல் பக்கத்து மரங்கள், காடுகள், விவசாய நிலங்கள் என்பன அவ்வப்போது தீக்கு இரையாகுகின்றன.
.
இந்த சாதார தொழில்நுட்பத்தை முறியடிக்க இஸ்ரேல் drone (ஆளில்லா சிறு விமானங்கள்) போன்ற விலை உயர்ந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுகிறது. வாலில் தீ பந்தம் கொண்ட படங்களின் நூலில் சிக்கி, அந்த படங்களை இழுத்து விழுத்துகின்றன இஸ்ரேலின் drone விமானங்கள். இஸ்ரேல் அதிகாரி ஒருவரின் கூற்றில் தாம் சுமார் 500 பட்டங்களை drone மூலம் வீழ்த்தி உள்ளதாக கூறியுள்ளார்.
.
கலர் தாள்களால் செய்யப்பட்ட பட்டங்கள் இலகுவில் அடையாளம் காணப்ட்டு தாக்கி அழிக்கப்படாலம் என்பதால், பலஸ்தீனர் கண்டாடி போல் ஒளி புகும் தாள்களிழும் படங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
.
இந்த பட்டங்களால் மூட்டப்பட்ட தீயை அணைக்க இஸ்ரேலின் விவாசாயிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
.